உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தோண்டப்பட்ட பள்ளத்தில் பஞ்சலோக சிலைகள் மீட்பு

தோண்டப்பட்ட பள்ளத்தில் பஞ்சலோக சிலைகள் மீட்பு

திருச்சி; கழிவுநீர் கால்வாய் கட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில், பழமையான பஞ்சலோக சிலைகள் மீட்கப்பட்டன. திருச்சி மாவட்டம், நத்தம் மேடு பழைய அக்ரஹாரம் பகுதியில், கழிவுநீர் கால்வாய் கட்ட பள்ளம் தோண்டியுள்ளனர். அந்த பள்ளத்தில், சிறியதும், பெரியதுமான நடராஜர், விஷ்ணு, ஆஞ்சநேயர், விநாயகர் என, 10 பஞ்சலோக சிலைகள் மண்ணில் புதைக்கப்பட்ட நிலையில் இருந்தன. அவற்றை பத்திரமாக மீட்ட பொதுமக்கள், தாசில்தாருக்கு தகவல் தெரிவித்தனர். சிலைகளை நேரில் பார்வையிட்ட தொட்டியம் தாசில்தார் செல்வி, ‘‘சிலைகள் அனைத்தும் முசிறி சப் – கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டு, முசிறி கருவூலத்தில் பாதுகாக்கப்படும்,’’ என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !