உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொள்ளாச்சி கோவில்களில் நவராத்திரி விழா: பெண்கள் திருவிளக்கு வழிபாடு

பொள்ளாச்சி கோவில்களில் நவராத்திரி விழா: பெண்கள் திருவிளக்கு வழிபாடு

பொள்ளாச்சி; முப்பெரும் தேவியரை போற்றும் நவராத்திரி விழாவை முன்னிட்டு, பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. கோவில்கள் மற்றும் வீடுகளில், பொம்மைகள் மற்றும் தெய்வ விக்ரஹகங்களை கொண்டு, கொலு அமைத்து, தினமும் பதார்த்தங்கள் படைத்தும், பஜனை பாடல்கள் பாடியும் மக்கள் வழிபடுகின்றனர். பொள்ளாச்சி மாரியம்மன் கோவில், ஐயப்பன் கோவில் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், நவராத்திரி விழா, சிறப்பு பூஜைகளுடன் துவங்கியுள்ளதால் பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபடுகின்றனர். * வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் வளாகத்தில் காசிவிஸ்வநாதர் சன்னதியில், துர்க்கை அம்மனுக்கு துர்காஷ்டமி தாளான நேற்று மாலை, 5:00 மணிக்கு இளநீர், மஞ்சள், வளையல், குங்குமம், பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிேஷக பூஜை நடந்தது. அதனை தொடர்ந்து, திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி பக் தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து நவராத்திரி கொலுவைக்கப்பட்ட இடத்தில் திருவிளக்கு பூஜை நடந்தது. பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு, மஞ்சள் கயிறு, குங்குமம், வளையல், பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !