ராஜ ராஜேஸ்வரி அலங்காரத்தில் வலம் வந்த திருவொற்றியூர் வடிவுடையம்மன்
ADDED :105 days ago
சென்னை; திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், நவராத்திரி திருவிழா, ஏழாம் நாளில் உற்சவ தாயார், ராஜ ராஜேஸ்வரி அலங்காரத்தில் எழுந்தருளி மாடவீதி உற்சவம் நடந்தது.
திருவொற்றியூர் ஸ்ரீ ஆதிபுரீஸ்வரர் தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோவிலில் மிகவும் பழமை வாய்ந்த கோயில் இதில் பல சித்தர்கள் ஞானிகள் வந்து வழிபட்ட ஸ்தலமாகும். இங்கு நவராத்திரி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. தினமும் அம்மன் கோவில் பிரகாரத்தில் சுற்றிவந்து பின்னர் நான்கு மாத வீதி வழியாக சுற்றி வந்து அருள்பாலித்து வருகிறது. விழாவில் ஏழாம் நாள் உற்சவமான இன்று தாயார், ராஜ ராஜேஸ்வரி அலங்காரத்தில் எழுந்தருளி மாடவீதி உலா வந்து பகதர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.