உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை ஈஷா லிங்க பைரவி வளாகத்தில் வித்யாரம்பம்

கோவை ஈஷா லிங்க பைரவி வளாகத்தில் வித்யாரம்பம்

தொண்டாமுத்தூர்; கோவை ஈஷா, லிங்க பைரவி வளாகத்தில், விஜயதசமியையொட்டி குழந்தைகளுக்கு வித்யாரம்பம் நடந்தது.விஜயதசமி தினத்தையொட்டி, குழந்தைகளுக்கு வித்யாரம்பம் நிகழ்ச்சி ஈஷாவில் உள்ள லிங்கபைரவிதேவி வளாகத்தில் இன்று நடந்தது. இதில், ஈஷாவை சுற்றியுள்ள முள்ளங்காடு, தானிக்கண்டி, பட்டியார் கோவில்பதி, மடக்காடு ஆகிய பழங்குடியின கிராமத்து குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு வித்யாரம்பம் நிகழ்ச்சி விமர்சையாக நேற்று நடந்தது. மேலும், விஜயதசமி தினத்தையொட்டி, ஆதியோகி, தியானலிங்கத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !