பாலுார் லட்சுமி நாராயணபெருமாள் கோவிலில் தேரோட்டம்
ADDED :15 hours ago
நடுவீரப்பட்டு; பாலுார் லட்சுமி நாராயணபெருமாள் மற்றும் பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத பிரமோற்சவ தேரோட்டம் நடந்தது. பிரம்மோற்சவ விழா கடந்த 24 ம் தேதி துவங்கி நாளை 4ம் தேதி வரை நடக்கிறது. தினமும் சுவாமிக்கு சிறப்பு சந்தனகாப்பு மற்றும் தீபாராதனையும், காலை, மாலையும் சுவாமி புறப்பாடு நடந்து வந்தது. நேற்று தேர்திருவிழா நடந்தது. விழாவையொட்டி, காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. 10:00 மணிக்கு பெருமாள் தாயாருடன் ஆலய உலாவாக வந்து, திருத்தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து, பக்தர்கள் தேர் வடம் பிடிக்க தேரோட்டம் நடந்தது.