திருவாடானை பெருமாள் கோயில்களில் புரட்டாசி சனி விழா
ADDED :22 hours ago
திருவாடானை அருகே குளத்துார் கிராமத்தில் அமைந்துள்ள குலசேகர பெருமாள், தொண்டியில் உந்திபூத்த பெருமாள், பாண்டுகுடியில் லட்சுமிநாராயணப் பெருமாள், ஆலம்பாடி கரியமாணிக்க பெருமாள், திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வரதராஜ பெருமாள் உள்ளிட்ட பல பெருமாள் கோயில்களில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தது.
பால், சந்தனம் போன்ற பல வகையான அபி ேஷகங்கள் நடந்தது. ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.