உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆண்டவர் உத்தரவு பெட்டியில் கடல்நீர் வைத்து பூஜை

ஆண்டவர் உத்தரவு பெட்டியில் கடல்நீர் வைத்து பூஜை

சிவன்மலை கோவில் ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில், மண் கலயத்தில் கடல்நீர் வைத்து நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.


திருப்பூர் மாவட்டம், காங்கயம் அடுத்த சிவன்மலையில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீசுப்பிரமணியர் கோவிலில், ‘ஆண்டவர் உத்தரவு பெட்டி’ வழிபாடு நடைமுறையில் உள்ளது. முருகப்பெருமான், பக்தர் கனவில் தோன்றி உணர்த்தும் பொருட்கள், உத்தரவு பெட்டியில் வைத்து பூஜிக்கப்படுகிறது. கடந்த மார்ச் மாதம், பிரம்பு மற்றும் கற்பூரம் வைத்து பூஜை நடந்து வந்தது.


கோவை துடிய லுாரை சேர்ந்த பக்தர் கனவில் தோன்றியபடி, நேற்று கடல்நீர் வைத்து சிறப்பு பூஜைகள் நடந்தது. மூடியுடன் கூடிய சிறிய மண் கலயத்தில், ராமேஸ்வரம் கடல் நீர் வைக்கப்பட்டுள்ளது.


சிவாச்சாரியார்கள் கூறுகையில், ‘கடல்நீர் வைத்து பூஜை நடப்பது, புயல் மற்றும் வெள்ளத்துக்கான குறியீடாக இருக்கலாம். தாமிரம், பித்தளை போன்ற கலசங்களில் தீர்த்தம் வைப்பதை போலவே, மண் கலசத்தில் கடல் தீர்த்தம் வைப்பதும் மங்களத்தை குறிக்கும். முருகப்பெருமான் அருளால் நல்லதே நடக்கும்,’ என்றனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !