உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுயம்பு ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடத்தில் பள்ளி கொண்ட பெருமாள் விக்ரகம் பிரதிஷ்டை

சுயம்பு ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடத்தில் பள்ளி கொண்ட பெருமாள் விக்ரகம் பிரதிஷ்டை

கோவை; சுண்டக்கா முத்தூர் பை-பாஸ் ரோடு புட்டு விக்கி பாலம் அருகே அமைந்துள்ள சுயம்பு ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடத்தில் பள்ளி கொண்ட பெருமாள் விக்ரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதில் முதல் நிகழ்வாக காலை கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து பள்ளி கொண்ட பெருமாளுக்கு சிறப்பு பூஜை. அபிஷேகம் நடந்தது. இதில் பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து அலங்காரம் செய்யப்பட்டது. நிறைவாக தீபாரதனையுடன் விழா நிறைவடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பள்ளி கொண்ட பெருமாளை தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !