கூழங்கலச்சேரி பெருமாள் கோவில் தெப்ப உத்சவம் விமரிசை
ஸ்ரீபெரும்புதுார்; படப்பை அடுத்த, கூழங்கலச்சேரி வெங்கடேசப் பெருமாள் கோவிலில், 4ம் ஆண்டு புரட்டாசி மாத தெப்ப உத்சவ திருவிழா நேற்று முன்தினம் வெகு விமரிசையாக நடந்தது.
குன்றத்துார் ஒன்றியம், படப்பை அடுத்த, கூழங்கலச்சேரி கிராமத்தில் வெங்கடேசப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் 3வது சனிக்கிழமை தெப்ப உத்சவ திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. மாலை 4:00 மணிக்கு வெங்கடேசப் பெருமாளுக்கு திருக்குடை சகல அழைப்பு, சாத்துபடி மாலை அலங்காரங்கள் நடந்தன. மாலை 6:00 மணிக்கு திருமலை ஸ்ரீபாதம் ஒய்யாலி நடன ஆட்டத்தை தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வெங்கடேச பெருமாள் எழுந்தருளி, பவனி வந்து அருள்பாலித்தார். இதில், கூழங்கலச்சேரி, செரப்பனஞ்சேரி, வைப்பூர், காரணித்தாங்கல், பேரிஞ்சம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.