விதி என்றால்...
ADDED :1 days ago
விதி என்றால் என்ன தெரியுமா’ என முல்லாவிடம் கேட்டார் ஒரு பணக்காரர். அதற்கு அவர், ‘‘நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டுமே’’ எனக் கேட்டார் முல்லா.
‘‘சொல்லுங்கள்... செய்கிறேன்’’ என்றார் பணக்காரர்.
‘‘எனக்கு அவசரமாக ஆயிரம் பொற்காசுகள் தேவைப்படுகிறது’’ என்றார் முல்லா.
‘‘திடீரெனக் கேட்டால் எப்படி தருவது... இப்போது வேண்டுமானால் இருநுாறு பொற்காசு மட்டுமே தர முடியும்’’ என்றார்.
‘‘பார்த்தீரா... என் எதிர்பார்ப்பு இப்போது நடக்கிறதா... இதையே விதி என்கிறோம்’’ என்றார் முல்லா.