உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் சிறப்பு பூஜை

கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் சிறப்பு பூஜை

புவனகிரி; புவனகிரி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் உலக அமைதி வேண்டி சிறப்பு யாகம் நடந்தது.


புவனகிரி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆரிய வைசிய சங்கம் சார்பில் புரட்டாசி பவுர்ணமி தினத்தில் உலக அமைதி வேண்டி சத்ய நாராயணா மற்றும் லட்சுமி நாராயணா சிறப்பு பூஜைகள், யாகம் நடத்தி வருகின்றனர். அதன்படி, இந்த ஆண்டுக்கான சிறப்பு பூஜைகள் நேற்று நடந்தது. 100க்கும் மேற்பட்ட தம்பதியர் பங்கேற்று யாகம் நடத்தினர். ஏற்பாடுகளை ஆரிய வைசிய சங்கத் தலைவர் சுந்தரசேன் தலைமையிலான விழா குழுவினர் செய்திருந்தனர். பூஜைகளை கோவில் அர்ச்சகர் ரஜினி சர்மா குழுவினர் செய்தனர்.





தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !