உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாவங்களைச் சுட்டெரிப்பவர்

பாவங்களைச் சுட்டெரிப்பவர்

மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், சூரியன், சந்திரன், அக்னி, ஆத்மா என எட்டு விதங்களில் இருந்து உலகத்திற்கு நன்மை செய்பவர் சிவபெருமான். அவரை போலவே சூரியனும் எட்டு விதங்களில் மக்களுக்கு நன்மை செய்கிறார் என்கிறது சூரிய சதகம். 


பூமிம் தாம்நோ அபிவ்ருஷ்ட்யா 

       ஜகதி ஜலமயீம் பாவநீம் ஸம்ஸ்ம்ருதாவபி

ஆக்நேயீம் தாஹசக்த்யா முஹீரபி 

       யஜமாநாம் யதா ப்ரார்த்திதார்தை;

லீநாம் ஆகாச ஏவம்  அம்ருதகர கடிதாம் 

       த்வாந்த பக்ஷஸ்ய பர்வணி

ஏவம் ஸீர்யோ அஷ்ட பேதம் பவ இவ பவத:


       பாது பிப்ரத்ஸ்வ மூர்த்திம். (சூரிய சதகம் 90)

* ஒளி, வெப்பத்திற்கு காரணமானவர்

* செழிப்பைத் தரும் மழைக்கு ஆதாரமானவர்

* நினைக்கும் போது காற்றாக வீசுபவர்

* கொடிய பாவங்களை சுட்டெரிக்கும் அக்னியாக இருப்பவர்

* உலக நன்மைக்காக நடத்தும் யாகங்களில் எஜமானர்களுக்கு செல்வம், நல்வாழ்வு தருபவர்

* ஆகாயத்தில் வீற்றிருப்பவர்

* அமாவாசையன்று சந்திரனோடு சேர்ந்திருப்பவர்

* நவக்கிரகங்களில் ஒப்பற்ற தலைவராக திகழ்பவர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !