உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாபம் போக்கும் சூரியத்தலம்

சாபம் போக்கும் சூரியத்தலம்

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்துக்குக் கிழக்கில் 15 கி.மீ தொலைவில் உள்ளது கீழச்சூரியமூலை. 1000 ஆண்டுகள் பழமையான சிறிய கோயில் இது. நவக்கிரகத் தலங்களில் ஒன்றான சூரியனார் கோவிலுக்கு வடகிழக்கில் இருப்பதால் இதற்கு கீழச்சூரிய மூலை எனப் பெயர் வந்தது. சூரியன் மூலாதார சக்தியை பெற்றதால் சூரியமூலை என்றும் அழைக்கப்படுகிறது. தனக்கு ஏற்பட்ட நோயில் இருந்து விடுபட சூரியன் சிவபூஜை செய்த தலம் இது. உதயத்தில் இருந்து அஸ்தமனம் வரை சூரியன் சூட்சும வடிவில் சிவபெருமானை இங்கு வழிபடுகிறார். காலையில் கிழக்கில் உதிக்கின்ற சூரியனை கோபுரம் மறைக்கும் என்பதால் இங்கு ராஜகோபுரம் இல்லை. கிழக்குப் பார்த்தபடி சூரியகோடீஸ்வரரும்,  தெற்கு பார்த்தபடி  பவளக்கொடி அம்மனும் அருள்கின்றனர். மண்டபத்தில் பைரவர், சூரியன் உள்ளனர். முன்னோர் சாபத்தை நிவர்த்தி செய்யும் தலம். சூரியன் வழிபட்ட சிவத்தலம் என்பதால் கண் நோய், பார்வை குறைபாடு தீர வழிபடுகின்றனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !