வடபழநி முருகன் கோயிலில் ஊக்கத்தொகையுடன் ஓதுவார் பயிற்சி; சேர்க்கை துவக்கம்
சென்னை; அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயிலில் செயல்பட்டு வரும் ஓதுவார் பயிற்சிப் பள்ளியில் 2025-2026 கல்வியாண்டிற்கான சேர்க்கை துவங்கியுள்ளது.
சென்னை மாநகரின் புகழ்வாய்ந்த தலமாக திகழ்வது வடபழநி முருகன் கோயில். சாதுக்கள் பிரதிஷ்டை செய்த சாலச் சிறந்த தலம் இது. பக்தர்களுக்கு வேண்டியதெல்லாம் தரும் இறைவனான வடபழநி ஆண்டவர் விளங்குகிறார். சிறப்பு மிக்க இத்தலத்தில் செயல்பட்டு வரும் ஓதுவார் பயிற்சிப் பள்ளியில் 2025-2026 கல்வியாண்டிற்கான சேர்க்கை துவங்கியுள்ளது. பயிற்சி வகுப்புகள் நேரம் காலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை அல்லது மாலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை ஆகும். சனி, ஞாயிறுகளில் முழு நேரமும் வகுப்புகள் நடைபெறும். ஓதுவார் பயிற்சியில் சேருவோருக்கு படிக்கும்போதே மாதந்தோறும் ரூ 5,000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.
முகவரி:
துணை ஆணையர்/செயல் அலுவலர்,
அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயில்,
வடபழனி, சென்னை - 600 026.
தொடர்புக்கு;
செல்போன்: 8072398360, 8939083753.