கோவில்களில் புரட்டாசி கடைசி செவ்வாய் சிறப்பு வழிபாடு; பக்தர்கள் தரிசனம்
ADDED :12 minutes ago
கோவை; புரட்டாசி மாதம் கடைசி செவ்வாய் கிழமையை முன்னிட்டு கோவை காட்டூர் ரங்க கோனார் வீதியில் அமைந்துள்ள விநாயகர் - சுப்பிரமணியர் - மாரியம்மன் கோவிலில் மூலவர் முருக பெருமானுக்கு அபிஷேகம், பூஜை நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் மூலவர் முருகன் பக்தர்களுக்கு காட்சியளித்தார், இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல், புரட்டாசி மாதம் கடைசி செவ்வாய் கிழமையை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் - தென்னம்பாளையம் ரோட்டில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மூலவருக்கு அபிஷேகம், பூஜை நடந்தது. இதில் மூலவர் அம்மன் சிறப்பு மஞ்சள் காப்புஅலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.