செல்வ விநாயகர் கோயிலில் சீனிவாச திருக்கல்யாணம்
ADDED :11 minutes ago
அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை ரயில்வே ஸ்டேஷன் செல்வ விநாயகர் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி, சீனிவாச பெருமாள் திருக்கல்யாணம் நடந்தது. திருக்கல்யாணத்திற்கு சீர்வரிசை பொருட்களை ஆழாக்கு அரிசி நந்தவன விநாயகர் கோயிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பக்தர்கள் முன்னிலையில் சீனிவாச பெருமாள் ஸ்ரீதேவிக்கு பூதேவிக்கும் திருக்கல்யாணம் நடந்தது. பக்தர்கள் பல்வேறு சீர்வரிசையுடன் விழாவில் கலந்து கொண்டனர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்தனர்.