உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்குற்றாலநாதர் கோவிலில் நடராஜருக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை

திருக்குற்றாலநாதர் கோவிலில் நடராஜருக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை

தென்காசி; ஐப்பசி விசு திருவிழாவை முன்னிட்டு திருக்குற்றாலநாதர் கோவிலில் நடராஜருக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடைபெற்றது.


தென்காசி மாவட்டத்தில் உள்ள இயற்கை அழகு கொஞ்சும் குற்றாலம் மெயின் அருவிக்கு அருகாமையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க குற்றாலநாதர் திருக்கோவிலில் வருடம் தோறும் ஐப்பசி விசு திருவிழாவானது வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த வருடத்திற்கான ஐப்பசி விசு திருவிழா திருகுற்றாலநாதர் சுவாமி திருக்கோவிலில் கடந்த ஒன்பதாம் தேதி கொடியேற்றத்துடன்  தொடங்கியது. ஐப்பசி விசுத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான நடராஜருக்கு, பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நிகழ்வு 8-ம் திருநாளான இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது., இந்நிகழ்ச்சியில் திரளான அளவில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பத்து நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவானது ஐப்பசி 1ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !