ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் புரட்டாசி ஏகாதசி சிறப்பு சேவை
ADDED :21 hours ago
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் புரட்டாசி ஏகாதசி விழா சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள் ஆஸ்தான சேவை சாதித்தார்.
108 வைணவத்திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்ற சிறப்புக்குரியதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் புரட்டாசி ஏகாதசி விழா சிறப்பாக நடைபெற்றது. இதனையொட்டி முதல் புறப்பாடாக, உற்சவர் நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து காலை சந்தன மண்டபத்துக்கு வந்து சேர்ந்தார். அங்கு நம்பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் சந்தன மண்டபத்திலிருந்து நம்பெருமாள் மாலை புறப்பட்டு மூலஸ்தானம் சென்றடைகிறார். இன்று நடைபெற்ற நம்பெருமாள் சிறப்பு புறப்பாடு மற்றும் ஆஸ்தான சிறப்பு சேவையில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.