திருவெறும்பூர் ஐயப்பன் கோவிலில் ஸர்ப்ப பலி பூஜை விமர்சை
திருச்சி; திருவெறும்பூர் அருகே உள்ள பெல் வளாகத்தில் அமைந்துள்ள ஐயப்பன் கோவிலில் புரட்டாசி ஆயில்ய நட்சத்திரத்தில் நாகராஜா பூஜை ஸர்ப்ப பலி பூஜை விமர்சையாக நடைபெற்றது.
50 கிலோ அரிசி மாவு மற்றும் மஞ்சள் பொடியில் நாக படம் வரைந்து அதற்கு பொங்கல் வைத்து இளநீர் மற்றும் வாழைத்தண்டில் தீபம் ஏற்றி லட்ச அர்ச்சனை செய்து பூஜைகள் நடைபெற்றது. அதற்கு முன் நாகராஜன் மூலவருக்கு பால் இளநீர் மஞ்சள் அபிஷேகம் செய்து சிறப்பு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நாகராஜா பூஜை செய்வதால் ஸர்ப்ப தோஷம் விலகுவதுடன், அஷ்ட ஐஸ்வர்யங்கள் கிடைப்பதுடன், திருமண தடை நீங்கும், புத்திர சம்பத்து கிடைத்து சௌபாக்கியங்கள் கிடைக்கும். நாகராஜ பூஜை திரளான பெல் வளாகத்தில் உள்ள மற்றும் சுற்றியுள்ள கிராமத்து பொதுமக்கள் கலந்து கொண்டு இந்த பூஜையை கண்டுபிடித்தனர். பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.