கனடாவில் 51 அடி உயர ராமர் சிலை பிரதிஷ்டை; பக்தர்கள் பரவசம்
ADDED :68 days ago
கனடா; தீபாவளித் திருநாளையொட்டி கனடாவில் 51 அடி உயரம் கொண்ட ராமர் சிலை பிரதிஷ்டை விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சிறப்பு வழிபாடு செய்தனர்.
கனடாவின் டொராண்டோ அருகே உள்ள மிசிசாகா பகுதியில் 51 அடி உயரத்தில் பிரம்மாண்ட ராமர் சிலை நிறுவப்பட்டுள்ளது. மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் காற்றைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சிலையின் பிரதிஷ்டை விழா தீபாவளித் திருநாளையொட்டி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.