உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முக்பா கிராமம் சென்ற கங்கா தேவி; குளிர்காலத்திற்காக கங்கோத்ரி கோயில் மூடப்பட்டது

முக்பா கிராமம் சென்ற கங்கா தேவி; குளிர்காலத்திற்காக கங்கோத்ரி கோயில் மூடப்பட்டது

உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கங்கோத்ரி கோவில் குளிர்காலத்தை முன்னிட்டு வேத மந்திரங்கள் முழங்க முறைப்படி மூடப்பட்டது.


இமய மலையில் உள்ள நான்கு சார்தாம் கோயில்களில் கங்கோத்ரியும் ஒன்று. ஆண்டுதோறும் குளிர் காலத்தில் அக்டோபர் நவம்பர் மாதங்களில் கங்கோத்ரி கோவில் மூடப்படும். கடல் மட்டத்திலிருந்து சுமார் 11 ஆயிரம் அடி உயரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. குளிர்காலத்தில் அதிக பனி படர்ந்து இருக்கும். இதனால் பக்தர்கள் வந்து செல்ல இயலாது. இதனை முன்னிட்டு, அன்னகூடம் மற்றும் கோவர்தன் பூஜையின் புனிதமான சந்தர்ப்பத்தில், கங்கோத்ரி கோயிலின் நுழைவாயில்கள் இன்று காலை 11:36 மணிக்கு குளிர்காலத்திற்காக மூடப்பட்டன. மூடப்பட்டதையடுத்து, பல்லக்கில் கங்கா தேவி சிலை முக்பா கிராமத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. இங்குதான் குளிர்காலத்தில் கங்கா தேவிக்கு ஆராதனை, வழிபாடு நடைபெறும். இங்கு பக்தர்கள் அம்மனை வழிபடலாம்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !