உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சூலூர் வட்டார முருகன் கோவில்களில் காப்பு கட்டி சஷ்டி விரதம் துவக்கிய பக்தர்கள்

சூலூர் வட்டார முருகன் கோவில்களில் காப்பு கட்டி சஷ்டி விரதம் துவக்கிய பக்தர்கள்

சூலூர்; கந்த சஷ்டி விழாவை ஒட்டி, காப்பு கட்டி பக்தர்கள் விரதத்தை துவக்கினர்.


சூலூர் வட்டார முருகன் கோவில்களில் இன்று காலை கந்த சஷ்டி விழா மற்றும் சூரசம்ஹார விழா துவங்கியது. கருமத்தம்பட்டி அடுத்த சென்னி யாண்டவர் கோவிலில் இன்று காலௌ கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து உற்சவ மூர்த்திக்கு காப்பு கட்டப்பட்டது. பின்னர் பக்தர்கள் காப்பு கட்டி கொண்டு கந்த சஷ்டி விரதத்தை துவக்கினர். 11:00 மணிக்கு சத்ரு சம்ஹார ஹோமம் மற்றும் அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இதேபோல், சூலூர் சிவன் கோவில், காங்கயம்பாளையம் சென்னி யாண்டவர் கோவில், கிட்டாம் பாளையம் பழனியாண்டவர் கோவில், மற்றும் பொன்னாண்டாம்பாளையம் சென்னியாண்டவர் கோவிலில் கந்த சஷ்டி விழாவை ஒட்டி சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு சுவாமி அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று முருகப் பெருமானை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !