உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டிவிழா துவக்கம்

திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டிவிழா துவக்கம்

நத்தம், நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கோவில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு கணபதி ஹோமம், கோமாதா பூஜைகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தது.தொடர்ந்து கோவில் முன்பு உள்ள கொடிமரத்தில் சேவல் உருவம் பொறித்த கந்தசஷ்டி திருக்கொடி ஏற்றப்பட்டது. பின்னர் முருகப்பெருமானுக்கு பால், பழம், பன்னீர், விபூதி, புஷ்பம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்களும், தீபாராதனைகளும், பூஜைகளும் நடந்தது. ராஜாங்க திருக்கோலத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.தொடர்ந்து பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர்.விழாவில் முன்னாள் ஊராட்சி தலைவர்கள் வீராச்சாமி, மணிமாறன் உள்ளிட்ட சுற்றுவட்டா கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து நாளை முருகப்பெருமான் சிவ பூஜை திருக்காட்சியும், நாளை மறுதினம் சிவ உபதேச திருக்காட்சியும், அக்-25-ல் அருணகிரியாருக்கு நடனக்காட்சி அருளல் நிகழ்ச்சியும், 26-ல் வேல்வாங்கும் திருக்காட்சியும் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கந்தசஷ்டி சூரசம்ஹாரம் வருகிற 27-ம் தேதி மாலை நடைபெறுகிறது. மறுநாள் 28-ம் தேதி காலை திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. இத்துடன் கந்தசஷ்டி திருவிழா நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் அழகுலிங்கம், இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் காயத்ரி உள்ளிட்ட குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !