உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் கந்த சஷ்டி விழா துவக்கம்

திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் கந்த சஷ்டி விழா துவக்கம்

திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் 47 ம் ஆண்டு கந்த சஷ்டி விழா இன்று துவங்கியது.


குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் திருமுருகன் திருப்பேரவை சார்பில் கந்த சஷ்டி விழா நடைபெறுகிறது. விழா துவக்கத்தை முன்னிட்டு இக்கோயிலில் வடக்கு நோக்கி அருள்பாலிக்கும் சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானைக்கு இன்று அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவர் அலங்காரத்தில் அருள்பாலிக்க தீபாராதனை நடந்தது. தினசரி மாலையில் முருகனுக்கு அபிஷேகம்,ஆராதனைகள் நடைபெறும். ஆறாம் திருநாளில் காலை 10:30 மணிக்கு சிறப்ப அபிஷேக்,ஆராதனைகளும், மாலை 5:00 மணி அளவில் சூரசம்ஹாரமும் நடைபெறும். அக்.28 காலை11:00 மணி அளவில் திருக்கல்யாண வைபவமும் நடைபெறும். திருப்புத்தூர் காளியம்மன் கோயில் அருகில்  முருகன் கோயிலில் வள்ளி தெய்வானை சமேத மூலவருக்கும், உற்சவருக்கும் ஏக காலத்தில் அபிேஷகம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்து கந்தசஷ்டி விழா துவங்கியது. இரவில் ஜோதிசுந்தரேஸ்வரின் சிறப்பு ஆன்மீக சொற்பொழிவு நடக்கிறது. அக்.27 ல் சூரசம்ஹாரமும், மறுநாள் திருக்கல்யாணமும், இரவில் திருவீதி உலாவும் நடைபெறும். ஏற்பாட்டினை கந்தசஷ்டி விழாக்குழுவினர் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !