உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாரம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றம்

சாரம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றம்

புதுச்சேரி: சாரம் சுப்ரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.


சாரம் முத்துவிநாயகர், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி, நாகமுத்துமாரியம்மன் கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹார பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம் விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. இதையொட்டி இரவு 7 மணிக்கு அம்மனுக்கு அபி ேஷக ஆராதனை நடந்தது. நேற்று காலை 10.30 மணிக்கு காப்பு கட்டுதல், கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. இரவு 8 மணிக்கு அன்ன வாகனத்தில் வீதியுலா நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். வரும் 3ம் தேதி வரை காலை, மாலை இருவேளையும் யாக சாலை பூஜை, இரவில் சாமி வீதி உலா நடக்கிறது. முக்கிய நிகழ்வாக வரும் 27ம் தேதி இரவு 7 மணிக்கு சூரசம்ஹார உற்சவம், மயில் வாகனத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது. 28 ம் தேதி இரவு 7 மணிக்கு வள்ளி தேவசேனா – சுப்ரமணிய சுவாமி திருக்கல்யாணம் நடக்கிறது. 31ம் தேதி மாலை 5 மணிக்கு மஞ்சள் நீர் உற்சவம், 3ம் தேதி காலை 8 மணிக்கு விடையாற்றி உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி நீலகண்டன் செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !