உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நடுவீரப்பட்டு கைலாசநாதர் கோவிலில் சூரசம்ஹார கொடியேற்றம்

நடுவீரப்பட்டு கைலாசநாதர் கோவிலில் சூரசம்ஹார கொடியேற்றம்

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு கைலாசநாதர் கோவிலில் கந்தசஷ்டி சூரசம்ஹார திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.


நடுவீரப்பட்டு காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர் கோவிலில் வரும் 27 ம் தேதி கந்த சஷ்டியை முன்னிட்டு சூரசம்ஹார விழா நடக்கிறது. விழாவை முன்னிட்டு நேற்று மதியம் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்து,மாலை 6:10 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. 25ம் தேதி சனிக்கிழமை இரவு 7:00 மணிக்கு தபசு ஏறுதல்,சிவனிடம் சூரபதுமன் வரம் பெறுதல் தாருகன் சூரன் வதம் செய்தல் நடக்கிறது. 26ம் தேதி ஞாயிறுக்கிழமை இரவு 8:00 மணிக்கு முருகர்,காமாட்சியம்மனிடம் சக்திவேல் வாங்கி,சிங்கமுக சூரனை வதம் செய்தல் நடக்கிறது. 27 ம் தேதி திங்கள்கிழமை கந்தசஷ்டியை முன்னிட்டு காலை 10:00 மணிக்கு மகா அபிஷேகம் நடக்கிறது.வீரபாகு தேவர்கள் ஊர்வலமாக சென்று வழிபடுதல் நடக்கிறது.மாலை 4:00 மணிக்கு வீரப்பாகு தேவர்கள் கம்பத்தடிக்கு மாவிளக்கு எடுத்து சென்று,கம்பம் ஏறுதல் நடக்கிறது. இரவு 6:30 மணிக்கு சூரசம்ஹார திருவிழா நடக்கிறது.8:00 மணிக்கு சூரனை வதம் செய்த சக்திவேலுக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. 28 ம் தேதி செவ்வாய்கிழமை தெய்வானை,முருகர் திருக்கல்யாணம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் வைத்திலிங்கம் தலைமையிலான குழுவினர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !