உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கந்த சஷ்டி விழா; மலையேறாத பழநி முருகன் கோயில் யானை..!

கந்த சஷ்டி விழா; மலையேறாத பழநி முருகன் கோயில் யானை..!

பழநி; பழநி கோயில் யானை கந்த சஷ்டி விழாவில் மலை மீது சென்று பங்கேற்கவில்லை.


பழநி முருகன் கோயில் யானை கஸ்தூரி 58. ஆண்டுதோறும் கோயில் யானை கஸ்தூரி, கந்த சஷ்டி முதல் நாளில் பழநி மலைக்கு யானை பாதை வழியாக சென்று காப்பு கட்டி அங்கேயே ஆறு நாட்கள் தங்கி இருக்கும். சஷ்டி விழா நாட்களில் தங்க ரத புறப்பாட்டின் போது பங்கேற்கும். சூரசம்ஹாரம் நிகழும் நாளன்று மலையிலிருந்து யானை பாதை வழியாக கீழே இறங்கி, கிரி விதியில் சூரசம்கார நிகழ்வில் பங்கேற்கும். அதன் பின் வெற்றி விழாவில் பங்கேற்றபின் பெரியநாயகி அம்மன் கோயில் அருகே உள்ள கோயில் யானை தங்கும் இடத்திற்கு வந்து சேரும். இந்த ஆண்டு மழை பெய்து வருவதாலும், யானை வயது அதிகரித்த காரணத்தினாலும் மருத்துவரின் அறிவுறுத்தலின் பேரில் மலைமீது யானை கொண்டு செல்லப்படவில்லை. பக்தர்கள் கிரி வீதி சூரசம்ஹார விழாக்களில் கோயில் யானை பங்கேற்கும் என எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !