உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரமடையில் மணவாள மாமுனிகள் அவதார வைபவம்

காரமடையில் மணவாள மாமுனிகள் அவதார வைபவம்

காரமடை; வைணவத்தில் ஆச்சாரியார்களில் முக்கியமானவர் மணவாள மாமுனிகள். இவர் ஐப்பசி மாதம் மூல நட்சத்திரத்தில் அவதரித்தார். இதனை கொண்டாடும் வகையில் அனைத்து வைணவ திவ்ய தேசங்களிலும் சிறப்பாக கொண்டாடப்படும் இந்த வைபவம் காரமடை அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் விமர்சையாக நடந்தது. 


அதிகாலை மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் முடிந்து கால சந்தி பூஜையை  தொடர்ந்து மணவாள மாமுனி உற்சவர் ஸ்ரீ ராமானுஜர் சன்னதிக்கு எழுந்தருளினார் அங்கு புண்யா வசனம் கலச ஆவாஹனம் ஸ்தபன திருமஞ்சனம் நடந்தது. இதில் நெய், தேன் பால் தயிர் இளநீர் மஞ்சள் சந்தனம் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் ராமானுஜர் மற்றும் மணவாள மாமுனி உற்சவமூர்த்திக்கு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து வெள்ளி சப்பரத்தில் வெண்பட்டு குடை சூழ மேலதாளம் முழங்க ரெங்க மண்டபத்தில் மணவாள மாமணி உற்சவர் எழுந்தருளினார். அங்கு ரங்கநாதரிடம் இருந்து மாலை பரிவட்டம் சடாரி மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து ஸ்தல தார்கள் ஸ்ரீ வேதவியாச பட்டர், திருமலைநல்லான் சக்கரவர்த்தி ஆகியோர் திவ்ய பிரபந்தத்தில் உபதேசரத்தினமாலை பாசுரங்களை சேவித்தனர். மீண்டும் மணவாள மாமுனிக்கு சடாரி மரியாதை மலர்மாலை மரியாதை அணிவித்து திருக்கோவில் வலம் வந்து ராமானுஜர் சன்னதியை அடைந்தார். பின்பு உச்சி கால பூஜை சற்றுமரை மங்கள ஆரத்தி தீர்த்த பிரசாதங்கள் விநியோகிக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் மிராசுதாரர்கள் திருக்கோவில் அதிகாரிகள் அறங்காவலர்கள் பக்தர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !