உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம்

குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம்

மேட்டுப்பாளையம்; காரமடை அருகே குருந்தமலையில் உள்ள அருள்மிகு குழந்தை வேலாயுத சுவாமி திருக்கோவிலில் சூரசம்காரம் விழா சிறப்பாக நடைபெற்றது.


கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு கடந்த 22ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. பின் தினமும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், யாகசாலையில் யாக வேள்வியும் நடைபெற்றது கடந்த ஞாயிற்றுக்கிழமை பரிவார மூர்த்திகளுக்கு விசேஷ அபிஷேகமும், மூலவருக்கு பராசக்தி அலங்காரமும், சக்திவேல் வழங்குதலும் நடைபெற்றது. கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சூரசம்ஹாரம் நேற்று மாலை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவின் ஒரு பகுதியாக இன்று காலையில் வள்ளி தெய்வானை சமேத வேலாயுத சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து திருவீதி உலா, அலங்கார பூஜை, மஞ்சள் நீர் உற்சவத்துடன் விழா பூர்த்தி அடைகிறது. விழாவிற்கான ஏற்பாட்டினை அறங்காவலர்கள் குழு தலைவர் மோகனப்பிரியா, திருக்கோவில் செயல் அலுவலர் வனிதா, அறங்காவலர் உறுப்பினர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !