உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னை முருகன் கோவில்களில் திருக்கல்யாண உத்சவம் கோலாகலம்

சென்னை முருகன் கோவில்களில் திருக்கல்யாண உத்சவம் கோலாகலம்

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில், கந்தசஷ்டி பெருவிழாவின் இறுதி நிகழ்வான திருக்கல்யாண உத்சவம் கோலாகலமாக நடந்தது.


வடபழனி முருகன் கோவிலில், திருக்கல்யாண உத்சவத்தை முன்னிட்டு, மாலை சீர்வரிசை புறப்பாடு தொடர்ந்து, சர்வ அலங்காரத்துடன் வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியர் மணமேடைக்கு எழுந்தருளி ஊஞ்சலில் அமர்ந்தார். சிறப்பு அலங்கார ஆராதனைகளை தொடர்ந்து, பின், மாங்கல்ய தாரணம் நடந்தது. பின், பக்தர்களுக்கு திருக்கல்யாண விருந்து நடந்தது.


மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலில் கந்த நேற்று காலை முதல் இரவு வரை ஏகதின லட்சார்ச்சனை நடந்தது. நேற்று இரவு, சிங்காரவேலர் திருக்கல்யாண வைபவம் விமர்சையாக நடந்தது. பெசன்ட்நகர், அறுபடை வீடு முருகன் கோவிலில் நேற்று மாலை தேவசேனை திருக்கல்யாண உத்சவம் விமரிசையாக நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். 


குன்றத்துார் முருகன் கோவிலில், நேற்று காலை முருகனுக்கு சந்தனகாப்பு அலங்காரமும், இரவு 7:00 மணிக்கு திருக்கல்யாணம் உத்சவமும் நடந்தது. கந்தகோட்டம் ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி கோவிலில் நடந்த நேற்று மாலை 6:45 மணிக்கு திருக்கல்யாண உத்சவம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !