இரத்தின விநாயகர் கோவிலில் சுப்பிரமணிய சுவாமி வீதி உலா
ADDED :59 days ago
கோவை; ஆர். எஸ். புரம் திவான் பகதூர் ரோட்டில் அமைந்துள்ள அருள்மிகு இரத்தின விநாயகர் கோவிலில் கந்த சஷ்டி விழா சிற்பபாக நடைபெற்று வந்தது. விழாவின் நிறைவு நாள் நிகழ்வாக இன்று வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி ஆர் எஸ் புரம் நகர வீதிகளில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானை தரிசனம் செய்தனர்.