உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி முருகன் கோயிலில் கந்தசஷ்டி திருக்கல்யாணம்

பழநி முருகன் கோயிலில் கந்தசஷ்டி திருக்கல்யாணம்

பழநி: பழநி முருகன் கோயில் கந்தசஷ்டி திருக்கல்யாணத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


பழநி முருகன் கோயில் கந்த சஷ்டி விழா அக்.22ல் துவங்கியது. அக்.27 ல் சூரசம்ஹாரம் நடைபெற்றது. நேற்று (அக்.28 ) கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் வள்ளி, தெய்வானை, சண்முகருக்கு 16 வகையான அபிஷேகங்கள் நடந்தன. காலை 10:50 மணிக்கு மங்கள வாத்தியங்கள் முழங்க சண்முகர்,வள்ளி, தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடந்தது. வெளிப்பிரகாரத்தில் சுவாமிகள் புறப்பாடு,அன்னதானம் நடைபெற்றது. அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியன், அறங்காவலர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பெரியநாயகி அம்மன் கோயிலில் வள்ளி, தெய்வானை, முத்துக்குமாரசுவாமிக்கும் திருக்கல்யாணம் நேற்று மாலை நடந்தது. அதன்பின் சுவாமி தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !