திருப்பரங்குன்றம் மகா வராஹி அம்மன் கோயிலில் மண்டலாபிஷேகம்
ADDED :107 days ago
திருப்பரங்குன்றம்; எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீ லலிதா பரமேஸ்வரி ராஜசியாமளா, மகா வராஹி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்த மறுநாள் முதல் நடந்த மண்டல பூஜை இன்று பூர்த்தி செய்யப்பட்டு மண்டலாபிஷேகம் நடந்தது. கோயிலில் தனித்தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள மூலவர்கள் உச்சிஷ்ட கணபதி, செந்திலாண்டவர், மகாவராஹி, ராஜசியாமளா, பாலதிரிபுரசுந்தரி, லலிதாபரமேஸ்வரி, காலபைரவர், அகஸ்திய முனிவர் , முத்து வடுகநாத, சித்தர் லோப முத்ரா சன்னதிகளில் யாக பூஜை, சண்டி ஹோமம் முடிந்து கலசாபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.