உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுச்சேரி கவுசிக பாலசுப்பிரமணியர் கோவில் சஷ்டி விழா நிறைவு ; தீர்த்தவாரி

புதுச்சேரி கவுசிக பாலசுப்பிரமணியர் கோவில் சஷ்டி விழா நிறைவு ; தீர்த்தவாரி

புதுச்சேரி, கவுசிக பாலசுப்பிரமணியர் கோவில் சஷ்டி நிறைவு விழாவை யொட்டி வள்ளி, தெய்வானை சமேத கௌசிக பாலசுப்பிரமணிய சுவாமி கடல் தீர்த்தவாரியில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


புதுச்சேரி, சுப்பையா சாலை, ரயில் நிலையம் எதிரே உள்ள கவுசிக பாலசுப்ரமணியர் கோவில் 73ம் ஆண்டு கந்த சஷ்டி சூரசம்ஹார, திருக்கல்யாண பிரம்மோற்சவ விழா, கடந்த 22ம் தேதி கொடி யேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வாக சூரசம்ஹார நிகழ்ச்சி 27ம் தேதி நடைபெற்றது.  சஷ்டி நிறைவு விழாவை யொட்டி கடல் தீர்த்தவாரி நடைபெற்றது. வள்ளி, தெய்வானை சமேத கௌசிக பாலசுப்பிரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !