திருப்பதியில் நவம்பர் மாதம் நடைபெறும் விழாக்கள் என்ன?
                              ADDED :7 hours ago 
                            
                          
                          
திருப்பதி; திருமலை ஏழுமலையானின் கோயிலில் ஆண்டு முழுவதும், 400க்கும் மேற்பட்ட உற்சவங்களும் சேவைகளும் நடைபெறும். ஒவ்வொரு நாளும் திருமலை சன்னதியில் திருவிழா நடைபெறும். அதன்படி திருமலையில் வரும் நவம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள முக்கிய நிகழ்ச்சிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அவையாவன; நவம்பர் 1: பிரபோதன ஏகாதசி, பேயாழ்வார் திருநட்சத்திரம், நவம்பர் 2: கையசிக த்வாதசி அஸ்தானம், சதுர்மாச விரதத்தின் நிறைவு, நவம்பர் 5: பௌர்ணமி கருட சேவை, நவம்பர் 9: கார்த்திகை வனபோஜனம், நவம்பர் 15: சர்வ ஏகாதசி, நவம்பர் 17: தன்வந்தரி ஜயந்தி, நவம்பர் 18: மாச சிவராத்திரி, நவம்பர் 25: திருமங்கை ஆழ்வார் உற்சவம் ஆகும்.