ஐப்பசி பவுர்ணமி; திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
ADDED :2 days ago
திருவண்ணாமலை; ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
நேற்று இரவு 9:43 மணி முதல், இன்று, 5ம் தேதி இரவு, 7:27 மணி வரை ஐப்பசி மாத பவுர்ணமி திதி உள்ளதால், ஏராளமான பக்தர்கள் நேற்றிரவு முதல், கிரிவலம் துவங்கினர். இன்று காலை, கோபுர தரிசனம் செய்து பக்தர்கள் கிரிவலம் துவங்கினர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கிரிவலம் சென்ற பக்தர்கள் மாடவீதி பகுதியில், ஆறு மணி நேரம் மேலாக காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பவுர்ணமி கிரிவலம் முடித்துக் கொண்டு ஊர் திரும்ப திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் இன்று காலை பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.