மூங்கில்துறைப்பட்டு முகிலேஸ்வரருக்கு அன்னாபிஷேகம்
ADDED :18 hours ago
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு காமராஜ் நகர் பாலமுருகன் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள முகிலேஸ்வரருக்கு நேற்று மாலை அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, சுவாமிக்கு காய்கறிகள், பழங்கள், பூக்கள் மற்றும் அன்னம் கொண்டு அலங்காரம் செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மூங்கில்துறைப்பட்டு காமராஜ் நகர், அண்ணா நகர் சுற்றுவட்டார பகுதி மக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனார்.