விளமல் பதஞ்சலி மனோகர் கோவிலில் ஐப்பசி பவுர்ணமி அன்னாபிஷேகம்
ADDED :343 days ago
திருவாரூர்: திருவாரூர் விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் ஐப்பசி பவுர்ணமி முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் அன்னாபிஷேகம் நிகழ்ச்சி நடந்தது.
திருவாரூர் அருகே விளமலில் மிகவும் பழமை வாய்ந்த பதஞ்சலி மனோகரர் திருக்கோவில் உள்ளது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 153 வது தேவாரத்தலமாகும். இக்கோவிலில் முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் அமாவாசை, பவுர்ணமியில் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதான நிகழ்ச்சி ஆண்டு தோறும் வெகு சிறப்பாக நடந்து வருகிறது. இன்று ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு அன்னாபிஷேகம், அபிஷேக அலங்கார, ஆராதனையில் பங்கேற்றனர். சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் பூஜையில் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சந்திரசேகர சிவாச்சாரியார் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.