கல்பாத்தி விஸ்வநாதர் கோவிலில் அன்னாபிஷேகம் வெகு விமர்சை
ADDED :1 days ago
கேரள மாநிலம், பாலக்காடு கல்பாத்தி விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவிலில் இன்று அன்னாபிஷேகம் வெகு விமர்சையாக நடந்தது.
கேரள மாநிலம் பாலக்காடு கல்பாத்தி விசாலாட்சி சமேத விஸ்வநாதர், மந்தக்கரை மகாகணபதி, பழைய கல்பாத்தி லட்சுமி நாராயண பெருமாள், சாத்தபுரம் பிரசன்ன மஹா கணபதி கோவில்களில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி அன்னாபிஷேக விழா சிறப்பாக நடைபெறும். அதன்படி இன்று வெகு விமர்சையாக அன்னாபிஷேகம் நடைபெற்றது. அன்ன அலங்காரத்தில் அருள்பாலி்த்த விஸ்வநாதரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது.