வாராஹி மந்திராலயத்தில் தேய்பிறை பஞ்சமி வழிபாடு; அம்மனுக்கு அபிஷேகம்
ADDED :329 days ago
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள வாராஹி மந்திராலயத்தில் தேய்பிறை பஞ்சமி திதியொட்டி நவசக்தி வாராஹி அம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெரியநாயக்கன்பாளையம் அருகே கூடலூர் கவுண்டம்பாளையத்தில் வாராஹி மந்திராலயம் உள்ளது. இங்கு ஐப்பசி மாதத்தின் தேய்பிறை பஞ்சமி திதியை ஒட்டி அன்னை நவசக்தி வாராஹி அம்மன், சிறப்பு மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தார். விழாவை ஒட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.