குழந்தை வேலப்பர் மலை அடிவாரத்தில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
ADDED :1 hours ago
ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் மலை அடிவாரத்தில் வீர விநாயகர் மற்றும் பால விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து பூஜைகள் செய்யப்பட்டது. ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் மலை அடிவாரத்தை சுற்றி கிரிவலப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. மலை மேல் உள்ள குழந்தை வேலப்பரை தரிசனம் செய்வதற்கு படிப்பாதைகள் அமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. கிரிவலப் பாதையை சுற்றி 100 விநாயகரை சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு மலை அடிவாரத்தில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று வீர விநாயகர் மற்றும் பால விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.