நீலிகோனாம்பாளையத்தில் அரவான் பண்டிகை; திருக்கல்யாண வைபவம்
ADDED :5 hours ago
கோவை; சிங்காநல்லூர், நீலி கோனாம்பாளையத்தில் அரவானுக்கு திருக்கல்யாண வைபவம் சிற்பபாக நடைபெற்றது.
அர்ச்சுனனுக்கும் நாக கன்னிக்கும் பிறந்தவன் அரவான். சாமுத்திரிகா லட்சணம் அனைத்தும் கொண்ட அழகன். இவன் களப்பலியானதால்தான் பாண்டவர்கள் போரில் வெற்றி பெற்றார்கள் என்பது புராண வரலாறு. நீலிகோனாம்பாளையத்தில்அரவான் பண்டிகை கடந்த மாதம் 28ம் தேதி பூச்சாட்டு நிகழ்ச்சியுடன் துவங்கியது.தொடர்ந்து கடந்த 04ம் தேதி கம்பம் நடுதல் விழா நடைபெற்றது. இதனை தொடர்ந்து செவ்வாய்கிழமை அரவான் திரு உருவத்தை அத்தி நாரால் சுவாமியை சிலை வடிவமைக்கப்பட்டு, இன்று (12ம் தேதி) அரவானுக்கு திருக்கல்யாண வைபவம் சிறப்பகாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.