திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை
ADDED :264 days ago
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் உள்ள கால பைரவர் சன்னதியில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கால பைரவருக்கு பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம் போன்ற பல அபிஷேகங்கள் செய்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.