நெல்லிக்குப்பம் நடன பாதேஸ்வரர் கோவிலில் காலபைரவருக்கு அஷ்டமி வழிபாடு
ADDED :184 days ago
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் நடன பாதேஸ்வரர் கோவிலில் ஆனந்த காலபைரவருக்கு தனி சன்னதி உள்ளது. தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு இன்று 1008 சங்குகளில் புனிதநீர் நிரப்பி யாகம் செய்து கால பைரவருக்கு சங்காபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் காலபைரவர் அருள்பாலித்தார். உற்சவர் கோவிலை வலம் வந்து அருள்பாலித்தார். கைலாசநாதர், பூலோகநாதர் கோவில்களிலும் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜைகள் நடந்தன.