கனகனந்தல் ஸ்ரீ விஜய விநாயகர் கோவில் ஆண்டு விழா
ADDED :62 days ago
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் அடுத்த கனகனந்தல் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ விஜய விநாயகர் கோவிலில் ஆண்டு விழா நடந்தது. திருக்கோவிலூர் அடுத்த கனகனந்தல் கிராமத்தில், அரச மரத்தடியில் அமைந்திருக்கும் பழமை வாய்ந்த ஸ்ரீ விஜய விநாயகர் கோவில் ஆண்டு விழாவை முன்னிட்டு, நேற்று காலை 7:30 மணிக்கு மகா கணபதி ஹோமம், அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு சந்தன காப்பு அலங்காரத்தில், அர்ச்சனை, மகா தீபாராதனை, பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் ஆலய விழா குழுவினர் செய்திருந்தனர்.