உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தஞ்சை பெரிய கோவிலில் உயிர் பெற்ற சிற்பங்கள்..!; வலைத்தளங்களில் வைரலாகும் ஏஐ வீடியோ

தஞ்சை பெரிய கோவிலில் உயிர் பெற்ற சிற்பங்கள்..!; வலைத்தளங்களில் வைரலாகும் ஏஐ வீடியோ

தஞ்சை;  உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் உள்ள சிற்பங்கள் உயிர் பெற்றால் எப்படி இருக்கும் என சமூக வலைத்தளங்களில் ஏஐ வீடியோ வைரலாகிவருகிறது.


உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலை மாமன்னன் இராஜராஜ சோழன்‌ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டினார். யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக விளங்கும் இக்கோவில் தமிழர்களின் கட்டிட கலைக்கும் சிற்ப கலைக்கும் எடுத்து காட்டாய் விளங்கி வருகிறது. இக்கோவில் தமிழர்களின் பெருமை என்றால் அது மிகையாகாது. அத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் எண்ணற்ற சிற்பங்கள் உள்ளன. இந்நிலையில் இந்த சிற்பங்கள் உயிர் பெற்றதால் எப்படி இருக்கும் என்ற AI வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதில் இராஜராஜன் பேசுவது போன்றும், சிற்பமாக இருக்கும் குதிரைகள் உயிர்ப்பித்து ஓடுவது போன்றும்,  துர்க்கை அம்மன், துவார பாலகர்கள் ஆடுவது போன்றும் உள்ளது. ஆயிரம் ஆண்டுகளாய் உயிர்ப்புடன் உள்ள சிற்பங்கள் ஏஐ மூலம் உயிர் பெற்றது கண்டு பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !