உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை

கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை

திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு மகா பைரவருக்கு மகா தீபாராதனை நடந்தது. அட்டவீரட்டானங்களில் ஒன்றான திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு நேற்று காலை மூல மூர்த்திகளுக்கு அபிஷேகம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசகம், கலச ஸ்தாபனம், மகா பைரவர் ஆவாகனம், 64 பைரவ, பைரவி பூஜைகள், அக்னி காரியங்கள், மூல மந்திரம், மாலா மந்திரம், ஸ்ரீருத்ர ஜெபம், ஹோமம், 108 மூலிகைகளால் ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை முடிந்து, கடம் புறப்பாடாகி சம்கார மூர்த்தி மகா பைரவருக்கு, மகா அபிஷேகம், அலங்காரம், சதுர்வேத பஞ்ச புராணம், பைரவர் ஸ்துதி பாராயணம், தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி வழிபாடு செய்தனர்.




தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !