கமுதி அருகே தீப்பந்தங்களுடன் முத்தாலம்மன் சாமி ஊர்வலம்
கமுதி; கமுதி அருகே நாராயணபுரம், கல்லுப்பட்டி கிராமங்கள் உள்ளது. இங்கு 2 ஆண்டுக்கு ஒருமுறை முத்தாலம்மன் சிலை எடுப்பு திருவிழா நடைபெறும்.இதனை முன்னிட்டு கமுதி பேரூராட்சிக்கு உட்பட்ட கண்ணார்பட்டி அருகே முத்தாலம்மன் சிலை செய்யப்பட்டது. நாராயணபுரம்,கல்லுப்பட்டி கிராமமக்கள் மண்ணால் செய்யப்பட்ட முத்தாலம்மன் சிலை கண்ணை துணியால் கட்டி கிராமமக்கள் தீப்பந்தங்கள் ஏந்தி கமுதி பஸ்ஸ்டாண்ட் உட்பட முக்கிய வீதிகளில் ஊர்வலமாக 2 கி.மீ., தூக்கி சென்றனர்.பின்பு நாராயணபுரம் கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் பீடத்தில் அம்மன் சிலை வைத்து கண் திறக்கப்பட்டு சிறப்புபூஜை,தீபாராதனை நடந்தது. பின்பு முத்தாலம்மன் சாமி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கிராமத்தின் வெளியே உடைக்கப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. கல்லுப்பட்டி, நாராயணபுரம் கிராமமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.தற்போதைய நாகரீக காலத்தில் திருவிழாக்களில் சீரியல் விளக்குகள், அதிகம் வெளிச்சம் தரக்கூடிய மின்விளக்குகள் இருந்தாலும் பாரம்பரியம் மாறாமல் நாராயணபுரம்,கல்லுப்பட்டி கிராமமக்கள் கடந்த நூறாண்டுகளுக்கு மேலாக முத்தாலம்மன் சிலை திருவிழாவை பாரம்பரியமாக கொண்டாடி வருகின்றனர்.