அருணாசலேஸ்வரர் கோவிலில் பராசக்தி அம்மன் தேர் வெள்ளோட்டம்
ADDED :26 minutes ago
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபம் விழாவை முன்னிட்டு பராசக்தி அம்மன் தேர் வெள்ளோட்டம் இன்று நடைபெற்றது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழா விழா ஏழாம் நாளில், பராசக்தி அம்மன் தேரோட்டம் நடைபெறும். பெண் பக்தர்கள் மட்டுமே முன்னின்று தேர் இழுப்பர். இந்த தேரை சீரமைக்கும் பணி நடைபெற்று வந்தது. ரூ.71 லட்சம் மதிப்பில் புலன அமைக்கப்பட்ட பராசக்தி அம்மன் தேர் வெள்ளோட்டம் இன்று நடைபெற்றது. பெண்கள் மட்டும் தேரை வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.