பூம்புகாரில் காவிரிக்கு ஆராதனைகளுடன் துறவிகள் உலக நலன் வேண்டி வழிபாடு
மயிலாடுதுறை ; அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் மற்றும் அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில், 15ம் ஆண்டு காவிரி விழிப்புணர்வு துலா தீர்த்த ரத யாத்திரை அக்டோபர் 24ம் தேதி தலைக காவிரியில் புறப்பட்டு 24 நாட்கள் சுமார் ஆயிரத்து 270 கிலோ மீட்டர் தூரம் கடந்து 175 இடங்களில் காவிரி அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் மற்றும் மகா ஆரத்தி நடந்தது.
நேற்று 16ம் தேதி காலை பூம்புகார் அருகே கருவியில் அதிபத்த நாயனார் மடத்தில் வரவேற்பு பூஜை மற்றும் பூம்புகார் கடற்கரையில் உள்ள ரத்தினபூர்ணேஸ்வரி அம்மன் கோயிலில் சிறப்பு ஹோமத்துடன் காவிரி அம்மனுக்கு பூஜை செய்து சப்த நதிகள் சங்கமமாக 7 கலசங்களின் புனித நீர் தீர்த்தத்தை சமுத்திரத்தில் சமர்ப்பிக்கும் வகையில் சிறப்பு பூஜை நடந்தது.
தொடர்ந்து உலக நலன் வேண்டி நடந்த சிறப்பு பிரார்த்தனையில் அகில பாரதிய சன்னியாசிகள் சங்க நிறுவனர் ஸ்ரீமத் ராமானந்த மகராஜ் சுவாமிகள், சங்க தலைவர் சிரவை ஆதீனம் ராமானந்தா குமர குருபர சுவாமிகள், பொது செயலாளர் சுவாமி வேதாந்த ஆனந்தா, தயானந்த சரஸ்வதி சுவாமிகள் ஆசிரமம் சாமினி சம்பிரதிஷ்டானந்தா மாதாஜி, தென்சேரிமலை ஆதீனம் தவத்திரு முத்து சிவராம சுவாமி அடிகளார், ஒகேனக்கல் சனாதன தர்ம ஆஸ்ரமம் தலைவர் சுவாமி மேகானந்த சரஸ்வதி சுவாமிகள், ரத யாத்திரை ஒருங்கிணைப்பாளர் பால ரகுநாதனந்தா சுவாமிகள், பூஜை ஒருங்கிணைப்பாளர்கள் ஸ்ரீ வித்யா அம்பாசரஸ்வதி சின்மய சிவப்பிரியா அம்பா சரஸ்வதி, பக்த தாயினி அம்பா அகில பாரதிய சன்னியாசிகள் சங்க துணை செயலாளர் கோரக்க்ஷானந்த சரஸ்வதி சுவாமிகள், விழா குழுவினர் ரவி, அருள்வீரானந்தகிரி உள்ளிட்ட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. நீர் நிலைகளை முழுமையாக பாதுகாப்பது,, தூய்மையாக பராமரிப்பது அனைவரின் கடமை என சிரவை ஆதீனம் தவத்திரு ராமானந்தா குமரகுருபர சுவாமிகள் கூறினார்.